திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் பல்நோக்கு பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பினை (SSC MTS) மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து கலெக்டர் பிரதீப்
குமார் உரையாற்றி, பயிற்சி கையேட்டினை வழங்கினார். அருகில், மண்டல இணை இயக்குநர் மு.சந்திரன், துணை இயக்குநர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஐ.மகாராணி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.