ரமலானை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பாபநாசம் அடுத்த ராஜகிரி முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் சார்பில் ராஜகிரி பெரியபள்ளியில் 43வது ஆண்டாக நடந்தது. நிகழ்ச்சிக்கு வெல்பேர் அசோசியேசன் தலைவர் முகம்மது காசிம் தலைமை வகித்தார். செயலாளர் அன்வர் அலி, பொருளாளர் சபீர் அகமது, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜகிரி
பெரியபள்ளி தலைவர் யூசுப் அலி, அன்பளிப்பை மக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பெரிய பள்ளி செயலாளர்
முகம்மது சுல்தான்,பொருளாளர் முல்லா பாரூக், முத்தவல்லி அப்துல் ரவூப், பெரிய பள்ளி நிர்வாகிகள் பீர் முகம்மது, அப்துல் ஹமீது, அப்துல் மாலிக், பெரியபள்ளி இமாம் மற்றும் ஜமாஅத்தார்கள், அன்னை கதீஜா ரலி கல்வி மைய நிர்வாகிகள், வெல்பேர் ஆர்வலர்கள் ஆரீப், அக்பர், பாங்க் ஆப் இந்தியா மேலாளர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 1200 பேருக்கு புடவை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டினை வெல்பேர் அசோசியேசன் நிர்வாகிகள் மற்றும் பெரிய பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.