புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார பகுதிகளான கத்தகுறிச்சி பாலையூர் குலவாய்ப்பட்டி மணியம்பலம் களங்குடி வல்லத்ரா கோட்டை வாண்டா கோட்டை பூவரசகுடி கொத்த கோட்டை தட்சிணாபுரம் திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சுமார் 900 ஹெக்டர் அளவில் சாகுபடி செய்து செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட சேத மதிப்பை கணக்கிடும்படியனை திருவரங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் மற்றும் வேளாண் அலுவலர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு நெல் சாகுபடி பயிர்களை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் விரைந்து பெற்று தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.