எடப்பாடிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததை தொடர்ந்து எடப்பாடியும், ஓ.பி.எஸ்சும் விரைவில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து எடப்பாடி ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, எடப்பாடியும், ஓபிஎஸ்சும் சந்திக்க வாய்ப்பே இல்லை. ஓபிஎஸ் இரட்டை இலைக்கு வாக்கு கேட்பேன் என்பதே முரண்டுபாடு தான் என்றார்.