Skip to content

பூ வியாபாரிடம் பணம் பறித்த ரவுடி கைது….

திருச்சி கிராப்பட்டி விறகுப்பேட்டையை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் தங்கவேல் (வயது 47) . இவர் பூக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று , தங்கவேல் இரு சக்கர வாகனத்தில் செட்டியப்பட்டி ரோடு பழனி நகர் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​ எடமலைப்பட்டி புதூர் மதுரை மெயின்ரோட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் காளி ரஞ்சித் (வயது 28), ரவுடி. இவர் தங்கவேலை வழிமறித்து பணம் கேட்டுள்ளார், ஆனால் தங்கவேல் தர மறுத்தார். எனவே, ரஞ்சித் கத்தியைக் காட்டி தங்க வேலை மிரட்டியுள்ளார். இந்த குறித்து தங்கவேலு எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே ரவுடியான காளி ரஞ்சித்தை பிடித்து அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!