சிம்பொனி நிகழ்ச்சியை அரங்கேற்றி இந்தியா திரும்பிய இளையராஜாவிற்கு நடிகர் சிவகுமார் தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இசைப்பாளர் இளையராஜா சமீபத்தில் சிம்பொனி இசை எழுதி அதை லண்டனில் அரங்கேற்றம் செய்தார். அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் சிவகுமார் தன்னுடைய மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோருடன் சென்று இளையராஜாவிற்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல் சூர்யா மற்றும் பிருந்தா ஆகியோர் இளையராஜாவிற்கு பூங்கொத்து கொடுத்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஏற்கனவே சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த லண்டன் சென்றபோது தான் வரைந்த இளையராஜாவின் ஓவியத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் சிவகுமார்.இந்த நிலையில் தற்போது நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது,