துருக்கியில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நேற்று அடுத்தடுத்து மேலும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு பலியானார்கள். நகரங்கள் எல்லாம் தரைமட்டமாக காட்சி அளிக்கிறது. ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் சிதைந்து போனது போல துருக்கி நகரங்கள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.
உயிர்பிழைத்த மக்கள் கடும் பனியில் ஆங்காங்கே தஞ்சமடைந்து உள்ளனர். மீட்பு பணிக்காக இந்திய பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து உள்ளனர். இதுபோல மேலும் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் பேரிடர் மீட்புக்குழுவினரும் துருக்கி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு, சொத்து சுகங்களை இழந்த மக்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் துருக்கியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது. இதனால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.