Skip to content

குஜராத் வழியாக போதை பொருள் கடத்தல் அதிகாிப்பு: மத்திய அரசு தகவல்

  • by Authour

கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்களில் போதைப்பொருள் பறிமுதல் அதிகரித்துள்ளதா?. துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு, அவற்றின் மதிப்பு எவ்வளவு?, துறைமுகங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஒன்றிய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், ”நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட ரூ.11,311 கோடி போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. இதில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள துறைமுகங்கள் வழியாக அதிக அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டது.
5 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் மட்டும் ரூ.7,350 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவில் ரூ.2,118 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளி விவரத்தின்படி பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில் அதிக அளவு போதைபொருள் கடத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.
error: Content is protected !!