Skip to content

ஆய்வுக்கு சென்ற கரூர் கலெக்டர்: தமிழில் வணக்கம் கூறி வரவேற்ற வடமாநில பெண்கள்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன்  கலெக்டர் தங்கவேல்  இன்று ஆய்வு  நடத்தினார்.

அதன் ஒரு பகுதியாக தனியார் (அட்லஸ்) ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்காக கட்டப்படும்  விடுதி பணிகளை  மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுடன்  கலெக்டர் பார்வையிட்டாா்.  1000  பெண்கள் தங்கும் அறை, உணவுக் கூடம், சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்டவை கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார்.

முன்னதாக ஆய்விற்கு வந்த மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு அந்நிறுவனத்தின் உரிமையாளர் நாச்சிமுத்து சால்வை, மாலை அணிவித்து வரவேற்றார்.

அப்போது, அங்கு பணி புரியும் வடமாநில பெண்கள்  வரிசையில் நின்று கலெக்டரை  வரவேற்றனர்.

அப்போது, அப்பெண்கள் வணக்கம் தெரிவித்து ஆட்சியரை  வரவேற்றனர்.

அவர்களிடம் தமிழ் தெரியுமா என ஆட்சியர் கேட்டார்.  கொஞ்சம், கொஞ்சம் தெரியும் என  பெண்கள் தெரிவித்தனர். அதற்கு ஆட்சியர் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

error: Content is protected !!