Skip to content

கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு சிறை ….

அரியலூர் மாவட்டம் குறிச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர், 2009 ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பதற்காக, ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ரமேஷ் என்பவரிடம் 4.5 இலட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ், சீட் வாங்கி தருவதாக கூறி அலைக்கழித்து ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து, பொன்னுசாமி மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரால் அனைத்து சாட்சிகள் மற்றும் விசாரணை ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, இறுதி கட்ட விசாரணை முடிவுற்றது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்ற நீதிபதி சங்கீதா சேகர், பொன்னுசாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!