நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் நேற்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 போ் கோா்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன், ஏற்கனவே தனக்கு கொலை மிரட்டல் இருபபதாக பலரது பெயரை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். போலீசார் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதில் கூறி இருந்தார். அத்துடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணனும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என வீடியோவில் தெரிவித்திருந்தார். அந்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் உடலை வாங்குவோம் என உறவினர்கள் கூறினர்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனை, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.