அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்த உள்ள 8வது அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (19.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் 8வது அரியலூர் புத்தகத் திருவிழா 20.03.2025 வியாழக்கிழமை முதல் 29.03.2025 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது. அதன்படி அரியலூர் புத்தகத் திருவிழா நடைபெற உள்ள வாலாஜாநகரம் அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் மேடை அமைத்தல், புத்தக அரங்குகள் அமைத்தல், பொதுமக்கள் வந்து செல்வதற்கான பாதைகள் அமைத்தல், வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பேச்சாளர்களுக்கான தங்கும் வசதிகள், மேடைகள் மற்றும் புத்தக அரங்குகள், புத்தக திருவிழா நடைபெறும் இடங்களில் தற்காலிமாக
அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளின் பாதுகாப்பு உறுதி தன்மை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு செய்தததுடன் பணிகளை விரைவாக முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.