Skip to content

ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரசலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சங்கர் (45), அரசலூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி கீதா(40). மாற்றுத்திறனாளியான இவர் அதே ஊராட்சியில் பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் ராஜேஷ்வரி (18) முசிறி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ  மூன்றாம் வருடம் படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசலூரில்  ஊராட்சி ஆழ்துளை மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் சீரான குடிநீர் வினியோகம் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி செயலர் சரவணனிடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். இருப்பினும்

உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை .

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அரசலூர் அண்ணாநகரை சேர்ந்த சுந்தரராஜ் மகன்கள் கருணாகரன் (28),
குணா (25) இருவரும் மது போதையில் பம்ப் ஆப்பரேட்டர் கீதா வீட்டிற்கு சென்று நீதானே தண்ணீர் திறந்துவிடுற எங்க ஏரியாவுக்கு தண்ணீர் சரியா வருவதில்லை.

நீ என்ன வேலை பார்க்கிறாய் என கேட்டு தகாத வார்த்தைகளால்  திட்டினர். இதை கீதாவின் மகள் ராஜேஸ்வரி தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும் மாற்றுத்திறனாளி கீதா, மகள் ராஜேஸ்வரி ஆகிய  இரண்டு பேரையும்  கடுமையாக தாக்கியதுடன் வீட்டையும் சூறையாடிவிட்டனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவத்தில் காயமடைந்த தாய், மகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி கீதா அவரது மகள் ராஜேஸ்வரி ஆகியோரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.  ஆனால் இன்னும்  வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் பஞ்சாயத்து செய்து  வருகிறார்கள் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

 

error: Content is protected !!