Skip to content

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

எஸ்டிபிஐ கட்சி  வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக முதலியார் சத்திரம் KMS மினி ஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன் அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை நிகழ்த்தினார்.

SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ் மற்றும் வர்த்தகர் அணி மாவட்ட துணைத் தலைவர் M.ஷேக் தாவூத் மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம் SDPI கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சித்திக்,மாவட்ட செயலாளர்கள் மதர்.Y. ஜமால் முகமது,Er.N.G. சதாம் உசேன்,மாவட்ட பொருளாளர் பிச்சை கனி, மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்
A.S.அப்துல் காதர்( பாபு),மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் மஜீத்,சிராஜ்,வர்த்தகர் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷபிக் ,பாபு வர்த்தகர் அணி ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் நசீர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வர்த்தகர் அணி மாவட்டச் செயலாளர் ஷேக் அப்துல்லா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்

மேலும், வர்த்தகர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் MAJ. சாதிக் பாஷா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக வர்த்தகர் அணியின் மாநில தலைவர் அமீர் ஹம்சா அவர்கள் கலந்துக் கொண்டு வணிகத்தை வளமாக்குவோம் வணிகர்களை பலமாக்குவோம் என்று வர்த்தகர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்கள்.

SDPI கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இமாம்.R. ஹஸ்ஸான் பைஜி.,MBA., அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.திருச்சி மாங்கா கிழங்கு வியாபாரிகள் சங்க தலைவர் K.T.தங்க ராசு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வர்த்தகர் அணி மாநில பொதுச் செயலாளர் k.S.கலீல் ரகுமான், வர்த்தக அணி மாநில செயலாளர் A.K.அப்துல் கரீம்,SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி,வடக்கு மாவட்ட தலைவர் ஜவகர் அலி,திருச்சி மொராய் சிட்டி நிறுவனர் லெரன், காந்தி மார்க்கெட் ஒற்றுமை சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ்நாடு,வணிகர் சங்க பேரமைப்பின் மாநில இணை செயலாளர் M.K.M. காதர் மொய்தீன்,தமிழ்நாடு வணிகர் பேரமைப்பின் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் A.M.P.ஹக்கீம், காந்தி மார்க்கெட் கிழங்கு மாங்காய் சங்க செயலாளர் K.A.H.ஜமால் முகமது, அல் ஹஜ் ஜூவல்லரி உரிமையாளர் கலீல் ரஹ்மான்,காஜா ஜூவல்லரி உரிமையாளர் காஜா, ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

error: Content is protected !!