தமிழ்நாடு பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். இதுபோல திருவள்ளூர், சென்னை , திண்டுக்கல் மாவட்ட பாடநூல் கழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டிய பாடநூல்களை வெளிசந்தையில் விற்று அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தி உள்ளனர். விசாரணையில் இது தெரியவந்ததால், தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.