நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்ததுடன் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இதனை தொடர்ந்து நேற்று இரவு இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து உரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து அவர்கள் பேசினர். இப்படி சந்திப்பு, கூட்டம் என டில்லியில் நேரத்தை கழித்த நியூசிலாந்து பிரதமர் இந்திய குழந்தைகளுடன் தெருவில் கிரிக்கெட்டி விளையாடியது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
STAIRS தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டி ஒரு பிரகாசமான தருணமாக இருந்தது. இதில் பிரதமர் குழந்தைகளுடன் மோதினார். செங்கற்களை அடுக்கி ஸ்டம்புகளாகப் பயன்படுத்தினர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ், நியூசிலாந்து தூதுக்குழுவில் உள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ராஸ் டெய்லர் மற்றும் அஜாஸ் படேல் ஆகியோரும் பங்கேற்றனர்.