திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சந்திர நகர் பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான 500 ட்ரப் பாக்ஸ் ஒப்பந்ததாரர் அங்கு வைத்துள்ளனர்.
ட்ரிப் பாக்ஸ் என்பது ரயில்வே துறைக்கு சொந்தமான உயர் ரக கேபிள்களை தண்டவாளம் அருகில் புதைத்து செல்லும் பொழுது அதனை பாதுகாக்க இந்த ட்ரப் பாக்ஸ் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் இருந்த ட்ரிப் பாக்ஸ்களை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தியதாக கூறப்படுகிறது தன் காரணமாக அனைத்து பாக்ஸ்களும் தக தகவென எரிந்து நாசம் ஆகின. மேலும் இதன் மதிப்பு 15 லட்சம் எனவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த
அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் ட்ரிபிள் எக்ஸ் வைக்கப்பட்ட இடத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிய வாய்ப்பில்லை எனவே மர்ம நபர்கள் தீ வைத்திருக்க கூடும் என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ரயில்வே துறைக்கு சொந்தமான 15 லட்சம் மதிப்பிலான டிரப் பாக்ஸ் எரிந்து நாசமாகிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.