Skip to content

கரூரில் அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்…. தலைமையாசிரியை சஸ்பெண்ட்..

  • by Authour

கரூர் அருகே புலியூர், காளிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25- க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பணியாற்றி வருகின்றனர்.

இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பள்ளியில் படிக்கும் மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ய வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்த பள்ளியில் மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுகுறித்து மாவட்டக்கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார். முன்னதாக மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

error: Content is protected !!