திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வம் நீக்கப்பட்டு, தர்மசெல்வத்துக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.தர்மசெல்வன் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக திரு. ஆ. மணி, பி.காம், பி.எல். எம்.பி., (பிரகி நிவாஸ், 84/ஏ-1, சேலம் மெயின் ரோடு, பாரதிபுரம், தருமபுரி 636 705) அவர்கள் தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.