Skip to content

பஸ்சில் முன்னாள் ஊ.ம.தலைவர் உடல் நசுங்கி பலி… திருச்சியில் சம்பவம்…

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிழங்காட்டை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ( 68. ) கிழங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் நேற்று திருச்சியில் உள்ள வக்ப் வாரிய அலுவலகத்துக்கு வந்திருந்தார். பின்னர் மீண்டும் புதுக்கோட்டை செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சாகுல் ஹமீது மீது மோதியது. இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாகுல் ஹமீதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாகுல் ஹமீதின் மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!