விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
2024 ஜூன் 5 முதல் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ளனர். இருவரும் பயணம் செய்த போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பூமி திரும்ப 9 மாதங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுனிதாவையும், புட்சையும் திரும்ப அழைத்து வருவதற்காக நாசா, ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஏவிய க்ரூ டிராகன் காப்ஸ்யூல் விண்வெளி நிலையத்தை அடைந்துவிட்டது. மார்ச் 19ஆம் தேதி சுனிதாவும், புட்சும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பும் பயணத்தில் இவர்களுடன் க்ரூ-9 பயணத்தின் இவர்களுடன் மற்ற உறுப்பினர்களான நாசாவின் நிக் ஹேக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸின் அலெக்சாண்டர் கோர்பனோவ் ஆகியோரும் பூமிக்குத் திரும்புவார்கள்.
இந்த நிலையில், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நீங்கள் இருந்தாலும், எங்கள் இதயத்துக்கு நெருக்கமாகவே இருக்கின்றீர்கள்; நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், இந்த மிஷனில் வெற்றியடையவும் இந்தியர்கள் பிரார்த்திக்கிறார்கள் பூமிக்கு திரும்பும் உங்களை, இந்தியாவில் சந்திக்க காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.