சினிமா இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 8 ம்தேதி லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்தார். இந்தியர் ஒருவர் சிம்பொனி அரங்கேற்றம் செய்வது இதுவே முதல்முறை. இதற்காக இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று டில்லி சென்ற இளையராஜா, பிரதமர் மோடியை சந்தித்தார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.