Skip to content

திருப்பத்தூர் தொழிலாளி மர்ம சாவு- போலீஸ் விசாரணை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெரு, கவரண்வட்டம் பகுதியைச் சேர்ந்த வர்  டிரைவர் விஜயன் (35).  இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் நேற்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த விஜயன் தூங்கி உள்ளார்‌.  இன்று காலை விஜயனுடைய கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து திம்மம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  அங்கு வந்த

போலீசார்  விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் யாரேனும் கொலை செய்தார்களா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

error: Content is protected !!