கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (45) இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இன்று இவர் திருப்பத்தூர் கோர்ட்டில் சொத்து பிரச்சனை காரணமாக வாய்தாவிற்கு வந்துள்ளார். அப்போது கோர்ட் வேலையை முடித்துக் கொண்டு திருப்பத்தூர் பகுதியில் உள்ள விமல்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார்.
அப்போது அவர் ஆர்டர் பண்ணி சாப்பிட்ட சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளிடம் கேட்ட பொழுது நீயே பிரியாணியில் கரப்பான் பூச்சியை போட்டு போட்டுவிட்டு ஓட்டல் மீது பழி சுமத்துகிறாய் எனவும் மேலும் அடாவடியாகவும் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அந்த பிரியாணியை பார்சல் பண்ணி கொண்டு திருப்பத்தூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு மனு கொடுக்க வந்தார். அதற்குள் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் முடிந்திருந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்க தொலைபேசியில் அழைத்துள்ளார்.
ஆனால் அந்த அலுவலர் தொலைபேசியை எடுக்கவில்லை எனவே இதுபோல் சுகாதாரமின்றி உணவு தயாரிக்கும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அவ்வப்போது ஓட்டல்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.