சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி பூங்கொடி 30. இவர் கரூர் மாவட்டம் குளித்தலை பஜனை மடம் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் நின்று கொண்டு தான் மிகவும் கஷ்டத்தில் உள்ளதாகவும் அதற்காக தன்னிடம் உள்ள தங்க காசுகளை விற்பதாக கூறி அங்கிருந்த பெண்கள் மற்றும் பொது மக்களிடம் விற்க முயன்று உள்ளார்.
பேருந்து நிலையத்தில் பெண்களிடம் போலி தங்க காசுகளை விற்க முயன்ற போது அங்கிருந்த குளித்தலையைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் சந்தேகம் அடைந்து பெண்கள் உதவியுடன் அவரைப் பிடித்து குளித்தலை போலீசார் வசம் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் போலி தங்க காசுகளை விற்க முயன்றது தெரிய வந்தது. இதனை எடுத்து போலீசார் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து ஒரு பக்கம் லட்சுமி படம் மற்றும் மறுபக்கம் 22 கேரட் கோல்டு 1996 என்ன பொறிக்கப்பட்ட 12 போலி தங்க காசுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை குளித்தலை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்