21 வருடங்களாக கோமா நிலையில் இருக்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரை ஆம்புலன்சில் அழைத்து வந்து அவரது தாய் தன்னை ஏமாற்றி போலி பத்திரம் செய்த தங்கை மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு
குடியாத்தம் அடுத்த விஐபி நகர் பகுதியில் வசிப்பவர் ரகுபதி முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மனைவி சுமதி இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் மூத்த மகன் கடந்த 21 வருடங்களுக்கு முன்பு எல்லை பாதுகாப்பு பணியில் பணிபுரிந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தபோது விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அன்று முதல் தங்களுடைய சொத்து நகை பணம் எல்லாவற்றையும் விற்று மூத்த மகனை காப்பாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கட்டவரபள்ளி பகுதியில் உள்ள சொத்தை தன்னுடன் பிறந்த ஐந்து அக்கா தங்கைகளுக்கு தன்னுடைய அப்பா பாகப்பிரிவினை செய்து கொடுத்த நிலையில் தனக்கு சொந்தமான சுமார் 10,000 சதுர அடி நிலம் மற்றும் வீட்டை தன்னுடைய கடைசி தங்கை அம்மு என்கிற லட்சுமி என்பவர் தன்னுடைய கணவர் பரந்தாமனுடைய செல்வாக்கை பயன்படுத்தி போலி பத்திரம் தயார் செய்து போலி மின் இணைப்பை பெற்று கடந்த 2013 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்து மோசடி செய்துள்ளனர்
இது சம்பந்தமாக ஆம்பூர் உமாரபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளாமல் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார்கள்.
எனவே என்னுடைய மகனின் மருத்துவ செலவிற்காக என்னுடைய சொத்து எனக்கு தேவைப்படுகிறது உடனடியாக போலி பத்திரம் செய்து மோசடி செய்த தன்னுடைய தங்கையிடம் இருந்து தனக்கு சேர வேண்டிய சொத்தை மீட்டு தர வேண்டும் அதேபோல் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து கோமா நிலையில் உள்ள தன்னுடைய மகனை ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.