கரூர் மாவட்டம் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ஜோதி தம்பதியினர்-இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
தனது மனைவிக்கு கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு மாதத்திற்குள் ஆபரேஷன் செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும், சிகிச்சைக்காக சுமார் 25 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்பதால் கூலி வேலை செய்து அன்றாட உணவுக்கு செலவு செய்வதால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறி மருத்துவ உதவிக்கு நிதி உதவி கேட்டு இன்று குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்:
மனுவில் கூறியதாவது….
மேல்கண்ட முகவரியில் ஜோதி வசித்து வருவதாகவும் மேலும் எனது இரண்டாவது பிரசவத்திற்கு எனது தாய் வீடான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிக்கு சென்று வந்திருந்தேன். அப்போது மருத்துவமனையில் எனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது அதனை தொடர்ந்து பரிசோதனையில் எனக்கு கல்லீரல் (liver cirrhosis ) செயலிழப்பு நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொடர் சிகிச்சைக்கு போதிய குடும்ப வருமானம் இல்லாததால் மேலும் எனது கணவர் சலவைத் தொழிலில் கூலி வேலை செய்து வரும் நிலையில் மேற்கண்ட சிகிச்சையை தொடர முடியவில்லை எனவும் , கடந்த வாரம் எனது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் நாங்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற பொழுது அங்கு எனக்கு நுரையீரல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும்,
மேலும் தொடர்ந்து ஒரு மாத காலத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும் எனவும் மேலும் சிகிச்சைக்காக ரூபாய் 25 லட்ச ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் போதிய குடும்ப சூழல் காரணமாக எனது இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை சிரமப்பட்டு வருவதாகவும், ஆகவே தயவு கூர்ந்து எனது நிலையை கருத்தில் கொண்டு எனது குழந்தைகளின் எதிர்காலம் நலனை எனது உயிரை காப்பாற்றுமாறு மேலும் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுமாறு தெரிவித்துள்ளனர்.