Skip to content

தொகுதி சீரமைப்பு: முதல்வர் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு- அமைச்சர் நேரு பேச்சு

  • by Authour

இந்தி திணிப்பு – தொகுதி மறு சீரமைப்பில் அநீதி – தமிழகத்திற்கான போதிய நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி மத்திய மாவட்டம் மாநகர திமுக இளைஞரணி சார்பில் உறையூர் குறத்தெரு பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக  முதன்மை செயலாளரும் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, மத்திய மாவட்ட செயலாளர். வைரமணி மாநகர மேயர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அப்போது அமைச்சர் நேரு பேசும்போது இந்தி திணிப்பு எந்த  வகையில் வந்தாலும் தமிழகம் அதை ஏற்காது.  தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களுக்கு அநீதி   நேராமல் தடுக்க  தமிழக முதல்வர்  எடுக்கும் நடவடிக்கைகளை அனைத்து மாநில முதல்வர்களும் வரவேற்கிறார்கள்.  முதல்வரின் நடவடிக்கையை  தெலங்கானா முதல்வர்  ரேவந்த் ரெட்டி    மனதார பாராட்டினார். அவரை நேரில் நான் அழைத்தபோது இதனை   ரேவந்த் ரெட்டி கூறினார்.

 

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜானகிராமன்,
முஹம்மது ஆசிப், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் முஹம்மது சாதிக், கழக இளம் பேச்சாளர்கள் மில்டன்,சிந்துநதி ராஜா ,

மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், மாவட்ட முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர்,
மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,
ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,பகுதி செயலாளர்கள் கவுன்சிலர் கமால் முஸ்தபா, நாகராஜன், மோகன்தாஸ், காஜாமலை விஜய்,ராம்குமார், முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன்,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி ஆர் சிங்காரம்,வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,
மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,மீனவர் அணி அமைப்பாளர் பால்ராஜ்,
மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ்,பி.ஆர்.பி. பாலசுப்ரமணியன்,
தனசேகர்,
கவுன்சிலர்கள் மஞ்சுளா பாலசுப்பிரமணியன், ராமதாஸ், புஷ்பராஜ்,மற்றும் என்ஜினீயர் நித்தியானந்தம்,
உள்ளிட்ட திமுக  நிர்வாகிகள்  திரளாக  கலந்து கொண்டனர்..

error: Content is protected !!