பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணத்தில் தொடர்பு உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மர்ம மரணம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை செய்து மர்ம மரணத்தின் உண்மை தன்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்.
எதிர்காலத்தில் பார்வை குறைபாடுடைய மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்த தேவையான தகுதி உடைய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து நிர்வாக சிரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சீரா பள்ளி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வரதராஜன், சந்திரசேகர், மாரியப்பன், மனோகரன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
