மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, இவர் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் அவர் ஓய்வில் இருப்பதாகவும் சமூகவலைதளங்கிளல் தகவல் வெளியானது. இது குறித்து நடிகர் மம்மூட்டி தரப்பில் கூறியதாவது:
இது முற்றிலும் தவறான செய்தி. அவர் நலமாக இருக்கிறார். ரமலான் மாதம் என்பதால் அவர் அதற்காக நோன்பு இருந்து வருகிறார். அதனால் படப்பிடிப்பில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் இந்த நோன்பு முடிந்த பிறகு அவர் மகேஷ் நாராயணன் படப்பிற்கு செல்வார்” என கூறினர்.