Skip to content

கரூர் அருகே நண்பனை குத்தி படுகொலை செய்த 2 பேர் கைது….

கரூர் அருகே பல்வேறு வழக்குகள் தொடர்புடைய ரவுடி சந்தோஷ் குமார் – நண்பர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் போதை தலைக்கேறியதில் உயிர் நண்பனால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது.

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வடக்கு பாளையம் பகுதியில் உள்ள அரசுமதுபான கடையில் நண்பர் ஒருவர் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் 10-க்கும் மேற்பட்டோர் 15.03.25 அன்று இரவு மது அருந்தி விட்டு வெளியே வந்த பொழுது போதை தலைக்கேறியதில் பிரகாஷ் குமார் மற்றும் சந்தோஷ் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது சண்டை முத்தியத்தில் சந்தோஷ் குமார், பிரகாஷ் என்பவரை தலையில் மதுபாட்டிலால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து பிரகாஷ் நண்பர்களுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திருப்பும் போது, தொழிற்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த சந்தோஷ் குமாரை பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் ஒன்றிணைந்து கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது, அங்கிருந்த அவரது மற்ற நண்பர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தோஷ் குமாரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் பிரகாஷ், உள்ளிட்ட அவரது நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பாட்டிலில் தலையில் தாக்கியதால் கோபத்தில் கொலை செய்து விட்டதாக சனப்பிரட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் தெரிவித்தனர். பின்னர் விசாரணை முடிந்த பிறகு இருவரையும் நீதிமன்ற காவலில் ஆஜர் படுத்தி 15 நாள் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

உயிரிழந்த சந்தோஷ் குமார் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கரூர், பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. நண்பன் பிறந்தநாளின் போது தலைக்கேறிய போதையில் நண்பனையே கொலை செய்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!