Skip to content

2நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்- 4 நாள் வங்கிகள் செயல்படாது

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும், பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், அதற்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

 மேற்கண்ட கோரிக்கைகள் எதையும் வங்கி நிர்வாகம் ஏற்கவில்லை. எனவே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எல்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி,  வரும் 24 மற்றும் 25-ந் தேதிகளில் நாடுதழுவிய 2 நாள் வங்கி ஸ்டிரைக் நடைபெறும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு உட்பட பல சங்கங்கள் இணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

வரும் 22ம் தேதி 4வது சனி என்பதால் விடுமுறை, 23ம் தேதி  ஞாயிறு விடுமுறை, அடுத்து 2 நாட்கள் ஸ்டிரைக்கால் விடுமுறை எனவே 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!