சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் புதிதாக குத்துச்சண்டை பயிலகம் திறப்பு நிகழ்வு திமுக பிரமுக சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மதுரவாயல் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கணபதி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு
விருது மற்றும் பரிசுகள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கி வாழ்த்தினார் .இதில் வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் நொளம்பூர் ராஜன் 147 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமணி மாதவன் மற்றும் மாவட்ட வட்ட பிராணி நிர்வாகிகள் பொதுமக்கள் பயிற்சி வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..