கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மலை அடிவார மண்டபத்தில்
அருள் பாலித்து வரும் விநாயகர் மற்றும் பாலமுருகன் ஆகிய கோவில்கள் மற்றும் கோவில் விமானம் ஆகியவற்றிற்கு திருப்பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று பாலாலயவிழா நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் சிவாச்சாரியார்கள்
வேத மந்திரங்கள் ஓத விழா நடைபெற்றது. விழாவில் செட்டியார் சமூகம், சோழிய வெள்ளாளர் சமூகம், விஸ்வகர்மா சமூகம் ஆகியவற்றை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் உபயதாரர்கள், உள்ளூர் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.