கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மற்றும் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ஆகிய பகுதிகளில் முடிவுற்ற திட்ட பணிகள் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கலந்து கொண்டார்.
அப்போது கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வழியாக செல்லும் மேம்பாலத்தின் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விபத்தில் காயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்தபோது அதை கண்ட
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது காரை விட்டு கீழே இறங்கி அவரை உடனடியாக கட்சி நிர்வாகி ஒருவர் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும்படி தனது உதவியாளரிடம் கூறினார்.
அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜி விபத்தில் காயமடைந்த நபருக்கு உதவிய நிகழ்வை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.