Skip to content

பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு அமெரிக்கா தடை..

அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வரிசையில் அடுத்ததாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் 43 நாடுகளின் விசாக்களுக்கு விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகள், குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் நாடுகள் என  3 பிரிவாக நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. சிவப்பு பிரிவில் ஆப்கானிஸ்தான் பூடான், வடகொரியா, ஈரான், ஏமன், சூடான் உள்ளிட்ட 11 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து யாருமே அமெரிக்காவிற்கு வர முடியாது. அடுத்ததாக ஆரஞ்ச் பட்டியலில் பாகிஸ்தான், ரஷ்யா, மியான்மர் உள்ளிட்ட 10 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா அளிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் விசா இன்டர்வியூவில் கட்டாயம் நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும். எனவே இப்பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் அமெரிக்காவுக்கு சென்று விட முடியாது.

மூன்றாவதாக மஞ்சள் பட்டியலில் பெரும்பாலும் ஆப்ரிக்க நாடுகள் உள்ளன. மொத்தம் 22 நாடுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் 60 நாளில் அமெரிக்காவின் சில சட்ட விதிகளுக்கு இணங்க வேண்டும். அதாவது, அமெரிக்கா வரும் பயணிகளின் விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும், பாஸ்போர்ட் வழங்குவதில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள், தடை செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் குடியுரிமை பெற்று அதன் மூலம் அமெரிக்காவில் குறுக்கு வழியில் நுழைவதை தடுத்தல் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஆரஞ்ச் அல்லது சிவப்பு பட்டியலுக்கு மாற்றப்படும். இந்த தகவல் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!