எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிடை இடையே மோதல் முற்றி வருகிறது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் விழாவை செங்கோட்டையன் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இதண்டையே இவர்களது மோதல் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்ட போது செங்கோட்டையன் அமைதியாக இருந்தார். இதேபோல் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
அதே சமயம் செங்கோட்டியை சபாநாயகர் அறையில் காத்திருந்தார். அவர் சபாநாயகர் அப்பாவு உடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே செந்தியாளர்கள் சந்திப்பின் போது செங்கோட்டையன் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியால் டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி, இந்த கேள்வியை செங்கோட்டையனிடமே கேளுங்கள் என பதில் அளித்தார். உட்கட்சி விவகாரத்தில் ஈ.பி.எஸ், செங்கோட்டையன் இடையே உரசல் அதிகரித்து வருவதால் அதிமுகவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.