கோவை மாவட்டம் வால்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காட்டு யானைகள் நடமட்டும் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளால் மக்களா அச்சத்தில் உள்ளனர். வால்பாறை அருகில் இன்று காலை படகு பகுதி அருகில் ஒற்றைக் காட்டு யானை சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வால்பாறை அருகே படகு இல்லம் உள்ளது அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து. பிரதான சாலையில் திடீர் என்று தேயிலை தோட்ட வழியாக ஒற்றை காட்டு யானை ஒன்று நடந்து வந்தது சாலையில் வாகனங்கள் சென்ற நிலையில் யானை சாலையை கடக்க முயன்றது. வாகன ஓட்டிகள் காட்டு யானையை கண்டதும் வாகனத்தை நிறுத்தினர்.காட்டு யானை சாலையில் கடந்து தேயிலை தோட்டம் வழியாக சென்றது இதனால் பரபரப்பு நிலவியது, தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
வால்பாறையில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை…. பரபரப்பு
- by Authour
