Skip to content

சஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார் விஜய்!….

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீபெரும்புதூர் தவெக தலைவர் விஜய் செல்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  கட்சி பணிகளுக்காக சென்னை வந்திருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மறைவால் அக்கட்சி தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீபெரும்புதூர் தவெக தலைவர் விஜய் செல்கிறார். ஏற்கனவே சஜி மறைவுக்கு விஜர் இரங்கல் தெரிவித்து இருந்தார். அந்த பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்பிற்குரிய சகோதரர் திரு. சஜி (எ) B.அந்தோணி சேவியர் அவர்கள் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. என் மீதும் கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!