தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதாவது 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 114 மாவட்ட செயலாளர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 6 பேர் நியமனம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 2026 எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட செயலாளர் தீவிரமாக கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியின் தலைவர் விஜய்யை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும் இப்படி இருந்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால், சஜி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.