கோவை, மதுக்கரை அருகே பாலத்துறை – திருமலையம்பாளையம் சாலையில் கோவை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி சந்தியா ஆண்டனி தலைமையில் கனிம வளத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை மடக்கி சோதனையில் ஈடுபட்டனர். அந்த லாரிகளில் முறையான அனுமதியின்றி சட்ட விரோதமாக சுமார் 6 யூனிட் கற்களை ஒவ்வொரு டிப்பர் லாரிகளிலும் கடத்திவரப்பட்டது தெரியவந்து உள்ளது. அந்த லாரிகளை ஓட்டி வந்த ஓட்டுனர்கள் திடீரென தப்பி ஓடி உள்ளனர். இது தொடர்பாக கனிம வளத்துறை தனி வருவாய் அலுவலர் குமார் கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் அளித்தார். புகாரின் பெயரில் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கோவை மதுக்கரை நகராட்சி தி.மு.க தலைவர் நூர்ஜஹான் நாசர் என்பவரது மகன் சாருக்கான் சட்டவிரோதமாக கனிமவள கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளதை அடுத்து சாருகான் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டுனர்களையும், உரிமையாளர் சாருக்கானையும் தேடி வருகின்றனர்.
