Skip to content

திருப்பத்தூர் … கலெக்டர் அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்துள்ளது. அதனை அறிந்த அக்கம்பாக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து உள்ள இந்த நபர் யார் எந்த பகுதியை சார்ந்தவர் எனவும் திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!