இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு. சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி
மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம், 7.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர். ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம். தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும்- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.