குளித்தலை அருகே குப்புரெட்டிப்பட்டியில் தனது மூன்று மகள்களை கடத்த முயன்றதாக தாய் அளித்த புகாரின் பேரில் பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினரை போலீசார் கைது செய்து, பிஎம்டபிள்யூ காரையும் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குப்பிரெட்டிப்பட்டி பகுதி விவசாய குடும்த்தை சேர்ந்த ரத்தினகிரி 50 – கார்த்திகைசெல்வி 45. இவர்களுக்கு பிரியங்கா 27, பிரியதர்ஷினி 25, பிரித்திகா 23. என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் பிரியங்கா கொல்லிமலை வன சரக்கத்தில் வனவராக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், I Natruralist வெப்சைட் மூலமாக பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக் 41 என்பவரிடம் ஏற்பட்ட பழக்கத்தில் கடந்த 11ம் தேதி கார்த்தி மற்றும் அவரது மனைவி கிரிஷ்மா 39 உடன் BMW காரில் வீட்டிற்கு நேரடியாக
வந்து மூன்று மகள்களையும் வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர். இதற்கு கார்த்திகைசெல்வியும் அவரது கணவர் ரத்தினகிரியும், தங்களது மகள்களை அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,
அப்போது அவர்கள் உங்கள் மகள்கள் எங்களுடன் வர ஒத்துழைக்கிறார்கள். நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று கூறி தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். மேலும் கார்த்திக்கை விசாரிக்கையில் அவர் பெங்களூரில் உள்ள ஒகானா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்,
இதில் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அப்பள்ளியை தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு கார்த்திக் என்பவர் தங்களது பள்ளியில் வேலை செய்யவில்லை என கூறவே சந்தேகம் ஏற்பட்டு, இதுகுறித்து அவர்கள் மீது குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்து குளித்தலை காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்துள்ளனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது மூன்று பெண்களை கடத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களது பிஎம்டபிள்யூ காரினையும் பறிமுதல் செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.
மேலும் பெங்களூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது மனைவி குறித்து குளித்தலை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.