Skip to content

காஷ்மீர்-கன்னியாகுமரி வரை 4000 கி.மீட்டர் ஓடி விழிப்புணர்வு… சிறுமிக்கு கரூரில் வரவேற்பு..

  • by Authour

ஹரியானா மாநிலம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சானியா என்ற 15 வயது மாணவி பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களால் அனைத்தும் சாதிக்க முடியும் என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4,000 கிலோ மீட்டர் செல்லும் ஓட்டத்தை

தொடங்கினார்.

பெங்களூர், சேலம், நாமக்கல் வழியாக இன்று 92வது நாளாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மாணவிக்கு கரூர் ராம்தேவ் சேவா சங்

சார்பில் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 120வது நாள் கன்னியாகுமரியில் தனது ஓட்டத்தை முடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து இன்று ஹோலி பண்டிகை முன்னிட்டு முகத்தில் வண்ணப் பொடிகளை பூசி உற்சாகத்துடன் கொண்டாடினர்.

error: Content is protected !!