Skip to content

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் அமல்

  • by Authour

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப் பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

வீடு இல்லாத  5 லட்சம் பேருக்கு வரும் ஆண்டில்  வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்படும்.

பழமையான தேவாலயங்கள் புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலத்தில்  5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும்.

முதல்வரின் முகவரித்துறையில் 88 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

வரும் நிதி ஆண்டில் மாநிலத்தின்  சொந்த வரி வருவாய் 14. 60 % உயரம் என  கணிக்கப்பட்டுள்ளது.  வரும் நிதி ஆண்டில்  மாநில நிதி வருவாய்  2.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.  இதில் வரி வருவாய்  1.92 லட்சம் கோடியாக இருக்கும். இதன் மூலம் நிதி பற்றாக்குறை  ரூ.41, 635 கோடியாக குறையும்.

நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.75 கோடியில் திட்டம்  தீட்டப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் செய்யும் முறை மீண்டும் செயல்படுத்தப்படும்.  15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன்களை  பெறலாம்.

புதுமைப்பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி ஒதுக்கப்படுகிறது.

உயர் கல்வி  பயிலும்  மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு விருப்பத்தின் பேரில்  லேப்டாப், அல்லது டேப்லெட் வழங்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் அறிவித்து உள்ளார்.

சுமார் 162 நிமிடம்  பட்ஜெட்டை  அமைச்சர் தாக்கல் செய்தார்.

 

 

 

error: Content is protected !!