ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் EVKS.இளங்கோவன் அவர்களை ஆதரித்து நேற்று திமுக முதன்மைச் செயலாளரும் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நேற்று வைராபாளையம், மாரியம்மன் கோவில்தெரு, கந்தசாமி தெரு, கலைமகள் தெரு, தீரன் சின்னமலை வீதி,ராஜவீதி சந்திப்பு, நெரிகல்மேடு, சொசைட்டி மில் அன்னை சத்யா நகர், கன்வென்ட், கூட்டுறவு வங்கி, வண்டிப்பேட்டை, காட்டூர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் நாசர், எம்எல்ஏ ரஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
