திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூரிய வெளிச்சத்தையே மறைக்கும் அளவிற்கு புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி பொழிவினால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகன ஓட்டிகள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான குனிச்சி,அண்ணாநகர், காமராஜ் நகர், கொரட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 8.30 மணி ஆகியும் அளவிலும் கடுமையான பணி மூட்டம் காணப்பட்டது . திருப்பத்தூர் தருமபுரி செல்லும் தேசிய
நெடுஞ்சாலையில் கடுமையான பணி முட்டத்தால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவில் பணி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது
இதனால் பள்ளி, கல்லூரி, பேருந்துங்கள் மற்றும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய வைத்தபடியே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். மேலும் சூரியனின் வெளிச்சத்தையே மறைக்கும் அளவிற்கு கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. எனவே பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கடும்சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..