Skip to content

சென்னை அருகே புதிய நகரம், 2 ஆயிரம் ஏக்கரில் உருவாக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.  பட்ஜெட்டில்   வெளியான முக்கிய அம்சங்கள் வருமாறு:

தமிழ்நாடு அரசின் சார்பில்  சிங்கப்பூர், துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் புத்தக கண்காட்சி நடத்த  ரூ.2 கோடி ஒதுக்கீடு

ஆண்டுதோறும்  உலக கணினி  தமிழ் ஒலிம்பியாட் போட்டி  நடத்த ப்படும். இதற்கான பரிசுத்தொகையாக ரூ.1 கோடி அறிவிக்கப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களை  மொழி பெயர்க்க  முதல் கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பழைய ஆவணங்களை டிஜிட்டல் படுத்த ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்.

தொல்லியல் ஆய்வுக்கு ரூ.7 கோடி ஒதுக்கப்படுகிறது.  கோவை, நாகை , வெள்ளலூர், கீழடி உள்ளிட்ட  8 இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி வரும் ஆண்டுகளில் நடத்தப்படும்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில்  ரூ.40 கோடியில்  அருங்காட்சியயம் அமைக்கப்படும்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.35, 600 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள்  ஊரகப்பகுதிகளில் கட்டப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் நாவாய் பகுதியில் புதிய அருங்காட்சியகம் அமைக்ப்படும்.

ஊரகப்பகுதிகளில்  உள்ள   சிதிலமடைந்த வீடுகளை இடித்து புதிய வீடு கட்டப்படும்.

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி பகுதிகளில்  சாலை பணிகள்  மேற்கொள்ளப்படும்.

திருச்சி, மதுரை, நெல்லை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் ஓடும் காவிரி, வைகை, நொய்யல், வைகை ஆறுகளில் கழிவு நீர் கலக்காதவாறு தடுக்க நதிக்கரை மேம்பாடு நடவடிக்கை எடுப்பதுடன், அந்த பகுதிகளில் பூங்காவும் அமைக்கப்படும். இதற்காக ரூ.400 கோடி ஒதுக்கப்படும்.

வேளச்சேரி- கிண்டி இடையே ரூ.300 கோடியில் மேம்பாலம் கட்டப்படும்.

102  கூட்டு குடிநீர் திட்டங்கள் ரூ.675 கோடியில்  சீரமைக்கப்படும்.

ஒருங்கிணைந்த நகர திட்டத்தின் கீழ் சென்னை அருகே புதிய  நகரம்(குளோபல் சிட்டி) 2 ஆயிரம் ஏக்கரில்  உருவாக்கப்படும்.  இதில் பன்னடுக்கு கட்டடங்கள்  ஏற்படுத்தப்படும். இதற்கான முதல்கட்ட பணிகளை டிட்கோ நிறுவனம் தொடங்கும்.

தொடர்ந்து பட்ஜெட் உரையை அமைச்சர் படித்து வருகிறார்.

 

 

 

 

 

 

error: Content is protected !!