Skip to content

“அமலாக்கத்துறை மூலம் பாஜகவினர் திசை திருப்ப முயற்சி”…. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள துணை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் சார்பில்காலநிலை வீரர்கள் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின்சார ஆட்டோக்கள் வழங்கி கொடியசைத்து வழியனுப்பினார். இதை தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில் தமிழ்நாடு புதுமைத் தொழில் முனைவோர் திட்டத்தின் (Sustain TN) இணைய முகப்பை தொடங்கி வைத்த அவர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பசுமை உட்கட்டமைப்புகளை முழுமையாக செயல்படுத்தியுள்ள   திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த என். பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, இடையக்கோட்டை  நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி,  கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளை பாராட்டி தலைமையாசிரியர்களிடம்  பசுமைப் பள்ளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” மும்மொழி கொள்கையை விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடுகளை முதலமைச்சரும் அமைச்சரும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். ஒன்றிய அரசு தமிழகத்தையும் பெரியாரையும் இழிவு படுத்துவதை கொள்கை முடிவாக செய்கிறார்கள். நாடாளுமன்றத்தில் நாகரிகம் இல்லாமல் தமிழர்களை விமர்சிக்கிறார்கள்.தமிழ்நாட்டு மக்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தக்க பதிலடி கொடுப்பார்கள். அமலாக்கத் துறையை அனுப்பியதே அவர்கள் தானே 15 – 20 நாளாக நடக்கக்கூடிய விவகாரம்தான் மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம். ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் நடத்தி வருகிறோம்.மத்திய அரசு தான் திசை திருப்புவதற்கு அமலாக்க துறையை அனுப்புகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மற்ற மாநில முதலமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எல்லாம் தமிழக அரசு சார்பில் அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!